தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறவிருந்த துறைத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, 5.1.2020 முதல் 12.1.2020 வரை நடைபெறும்.
தொகுதி – 1இல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
தமிழகத்திலேயே கூடை பின்னும் பணியை தொழிலாகக் கொண்ட கிராம மக்கள்
மேலும் திட்ட அலுவலர், உளவியலாளர், சிறை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி 21.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய இரு நாட்களில் நடைபெறும்” என அதில் கூறப்பட்டுள்ளது.