ETV Bharat / city

Temple Advisory Committee: கோயில்களில் வசதிகளை மேம்படுத்த ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு - kundrakudi ponnambala adigalar

Temple Advisory Committee: கோயில்களில் வசிதிகள் மேம்படுத்தவது, கோயிலை சீரமைப்பது போன்ற பிற ஆலோசனைகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Temple Advisory Committee, உயர்மட்ட ஆலோசனை குழு
Temple Advisory Committee
author img

By

Published : Jan 7, 2022, 11:09 AM IST

Temple Advisory Committee: சென்னை: "அனைத்து முக்கிய இந்து கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகள் வழங்குவதற்கும் மாநில அளவிலான ஓர் உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை தலைவராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அலுவல் சார்ந்த இந்து சமய அறநிலையத்துறை செயலரும், ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

13 பேர் அலுவல் சாரா உறுப்பினர்கள்

மேலும், தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஓய்வுபெற்ற நீதியரசர் டி. மதிவாணன், சு.கி.சிவம், தேச. மங்கயர்க்கரசி உள்பட 13 பேர் அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்ட குழு முதல் நிலை குழுவாக கருதப்பட்டு, பயணப்படி, தினப்படி ஆகியவை அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அர்ச்சகர்களுக்கு சீருடை - திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.