சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற திட்டத்தைத் தொடங்கினார். அதன்மூலம், பெறப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவித்திருந்தார்.
அவ்வாறு பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வுகாண "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற பிரிவு தொடங்கப்பட்டு மாவட்ட வாரியாக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்சாரம் சார்ந்த மனுக்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் அவற்றிற்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு கண்காணிப்பு அலுவலராக மின்சார வாரிய தலைமைப் பொறியாளரை நியமித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா...? இதை செய்து பாருங்கள்...