ETV Bharat / city

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

tn rains
தமிழ்நாடு மழை நிலவரம்
author img

By

Published : Dec 10, 2021, 1:44 PM IST

Updated : Dec 10, 2021, 2:15 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக இன்று (டிசம்பர் 10) கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், "நாளை (டிசம்பர் 11) கடலோர மாவட்டங்கள், அதனையொட்டிய உள் மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 12 அன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 13 அன்று, கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN WEATHER: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Last Updated : Dec 10, 2021, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.