ETV Bharat / city

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ்? - TN

சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரிபாதி ஐபிஎஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிஜிபி
author img

By

Published : Jun 27, 2019, 5:15 PM IST

தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக (டிஜிபி) பதவி வகித்து வரும் டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த தமிழ்நாடு சட்டம் இழுங்கு இயக்குனரை (டிஜிபி) தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, தமிழ்நாடு சட்டம் இழுங்கு இயக்குனர் பதவிக்கு தகுதிவுடையவர்களின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதில், திரிப்பாதி, ஜாபர் சேட்,லட்சுமி பிரசாத் ஆகிய 3 பேரின் பெயர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பியது.

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரிப்பாதி ஐபிஎஸ் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒடிசாவில் பிறந்த திரிபாதி இந்திய காவல்துறை உயர் அதிகாரிகளில் சர்வதேச அளவிலான இரண்டு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். முக்கியமாக 2001 அக்டோபர் 31ஆம் தேதி டொரொண்டோவில் நடைபெற்ற 110 நாடுகள் பங்கேற்ற 108ஆவது ஆண்டு சர்வதேச முதன்மை காவலர்கள் சங்கத்தின் நிறைவு விழாவில், சர்வதேச சமூக காவல் விருதும், 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஸ்காட்லாண்டில் காமன் வெல்த் சங்கத்தின் பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிவு சார்பில் நிர்வாகத்திறனில் புதுமை படைத்ததற்கான தங்கப் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது. காமன் வெல்த் நாடுகளில் இந்த விருதைப் பெற்ற முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இந்திய அரசாங்கம் "Friendly Neighbourhood Cops" என்னும் தலைப்பில் இந்திய அரசு தயாரித்த ஆவணப் படத்தில் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக காட்சிகள் அமைத்து நாடு முழுவதும் அனுப்பியது.

மேலும், சிறந்த சேவைக்கான காவலர் விருது இவருக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:புதிய தமிழக டிஜிபி யாக திரிப்பாதி ஐபிஎஸ்??
அவர் கடந்து வந்த பாதை..

தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக இருந்து வரும் டி.கே ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகிற 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது..இதனால் தமிழக அரசு இது தொடர்பாக 14 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பியது.இதில் 3 பேரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்து உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு அனுப்பியது.இதில் திரிப்பாதி,ஜாபர் சேட்,லட்சுமி பிரசாத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளனர்.இதில் திரிப்பாதியே தமிழக டிஜிபியாக தமிழக அரசு நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிபாதி கடந்து வந்த பாதை..

ஒடிசாவில் பிறந்த திரிபாதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் தனது முதுகலை தத்துவ படிப்பில் பட்டம் பெற்றார்.

தனது பி.எச்.டி ஆய்வினை மேற்கொண்டு வந்த திரிப்பாதி 1985 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர் டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பிறகு சென்னை தெற்கு இணை ஆணையராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

அதன் பின் தமிழ்நாடு நிர்வாகத்துறை ஐ.ஜி ஆகவும், பின்னர் தெற்கு மண்டல ஐ.ஜி ஆகவும் ஆயுதப்படை, குற்றம், பொருளாதாரக் குற்றம், காவல் தலைமையகம், அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார். மேலும், கூடுதல் டி.ஜி.பி ஆக சிறை துறையிலும், 2 முறை சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் அமலாக்கத்துறையில் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்பொழுது இவர் டி.ஜி.பி ஆக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் தலைவராக உள்ளார். இவர் திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையில் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பீட் ஆஃபீசர் முறை, புகார் பெட்டி திட்டம், சேரி தத்தெடுப்பு முறை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

அதேபோல சிறைதுறையில் இருந்தபோதும், மகாத்மா காந்தி சமூக கல்லூரியை அனைத்து சிறைகளிலும் நடைமுறைபடுத்தினார்.2002 ஆம் ஆண்டு காவல்துறையில் சிறந்த சேவையை மேற்கொண்டதற்கான விருதையும் இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் மால்கம் எஸ்.ஆதிசேஷையா சிறப்பு விருதையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும், இந்திய காவல்துறை உயர் அதிகாரிகளில் சர்வதேச அளவிலான இரண்டு விருதளையும் பெற்ற பெருமைக்குரியவர் இவர், அதில் முக்கியமாக 2001 அக்.31 தேதி டொரொண்டோவில் நடைபெற்ற 110 நாடுகள் பங்கேற்ற 108வது ஆண்டு சர்வதேச முதன்மை காவல்ர்கள் சங்கத்தின் நிறைவு விழாவில், சர்வதேச சமூக காவல் விருதும் 2002 ஆம் ஆண்டு செப்.11 ஆம் தேதி ஸ்காட்லாண்டில் காமன் வெல்த் சங்கத்தின் பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிவு சார்பில் நிர்வாகத்திறனில் புதுமை படைத்ததற்கான தங்கப் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது. காமன் வெல்த் நாடுகளில் இந்த விருதைப் பெற்ற முதல் காவல் அதிகாரி இவர் ஆவார்.

இந்திய அரசாங்கம் "Friendly Neighbourhood Cops" என்னும் தலைப்பில் இந்திய அரசு தயாரித்த ஆவணப் படத்தில் இவரது பணியினை சிறப்பு படுத்தி காட்சிகள் அமைத்து நாடு முழுவதும் அனுப்பியது.

மேலும், 2006 ஆம் ஆண்டு "Innovation for India Foundation" என்னும் அமைப்பு இவரது முயற்சிகளுக்காக விருதி வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமல்லாமல் பிரதம மந்திரியின் பொது நிர்வாகத்திறன் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி இவர் ஆவார். இந்த விருது இவருக்கு 2008 ஆம் ஆண்டு ஏப்.21 ஆம் தேதி டெல்லியில் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சேவைக்கான காவலர் விருது இவருக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.