ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் ஊத்துக்கோட்டை பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் தலைமையில் அப்பகுதி மக்களுக்கு மதிய உணவு,காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
பின்னர் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில் ஊத்துக்கோட்டை பஜார் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்
பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற சட்டமன்ற உறுப்பினர், கடந்த மழைக்காலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
தற்போது வரை 85% மேம்பால பணிகள் நிறைவு பெற்றதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேம்பால பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.