ETV Bharat / city

விரைவில் ஆவின் குடிநீர் பாட்டில் - அமைச்சர் நாசர் - சென்னை தலைமை செயலகம்

ஆவின் நிறுவனம் மூலம் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரித்து, விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்
author img

By

Published : Aug 3, 2022, 2:03 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மு. நாசர் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் தண்ணீர் பிளாண்ட் (R.O Plant) உள்ளது. அங்கு இருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளது.

தற்போது, தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், அரசு விளம்பரங்கள் மற்றும் சிறப்பு நாள்கள் தொடர்பான புகைப்படம், விளம்பரங்கள் ஆவின் பாக்கெட்டுகளில் இடம்பெற்று வரும் நிலையில், சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுமாறு திரைத்துறையினர் கேட்டு வருகின்றனர். திரைப்படங்களின் விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதலமைச்சர் இறுதி முடிவை அறிவிப்பார்.

ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது 28 லட்சமாக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக ஆவின் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் டெண்டர் முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.