ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகள் - local body election chaos

உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது வாக்கு சீட்டில் ஏற்கனவே மை அச்சிடப்பட்டுள்ளது, கட்சி சின்னம் காணோம் உள்ளிட்ட பல குழப்பங்களால் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு தாமதமானது.

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகள்

author img

By

Published : Dec 28, 2019, 8:40 AM IST

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எடையூர் கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்குச் சீட்டில் சில சின்னங்களில் ஏற்கனவே மை அச்சிடப்பட்டு வந்துள்ளதாலும் மேலும் வாக்குச் சீட்டு தரம் குறைவாக உள்ள காரணத்தால் வாக்கு மை பின்புறமும் தெரிகிறது போன்ற காரணங்களால் வாக்குப்பதிவு இரண்டு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் வாக்களித்தவர்களின் வாக்குச் சீட்டின் பின்பக்கத்தில் அலுவலர்கள் கையெழுத்திட்டும் மாற்று வாக்குச்சீட்டுகளை வழங்கிய பின்னர் தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சியில் உள்ள மூன்று வார்டு பூத்களில்
ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பவர்களை கண்டறிந்து, அவர்களிடம் வாக்குச் சீட்டை மாற்றி கொடுத்து வாக்குகளை செல்லாத ஓட்டுகளாக மாற்றும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி
தருமபுரி மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் இளைஞர் ஒருவருக்கு தான் வாக்களிக்க நினைத்த சின்னம் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை நிறுத்திவைத்து சிலர் அந்த வாக்குச்சாவடியை முற்றுகையிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டை சோதனை செய்து பார்த்ததில் அதில் 7 சீட்டுகளில் சின்னம் மாறி இருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அந்த வாக்காளரிடம் தேர்தல் அலுவலர் பேசி பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செம்மங்குடி ஊராட்சியில், வாக்குச்சீட்டு மாறியதால் 8 மற்றும் 9ஆவது வார்டுகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. தேர்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் ஈக்காடு ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம் ஒன்றில் வாக்களிக்கும் சீட்டுகளில் அச்சிட்ட மை பின்புறம் தெரிகிறது என்று வேட்பாளர்கள் சிலர் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் சிறுது நேரம் வாக்களிப்பது நிறுத்தப்பட்டதால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகள்

இதையும் படியுங்க:

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி அவசர மனு

Intro:திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியத்தில் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் காலைமுதல் வாக்காளர்கள் விறுவிறுப்பாக ஓட்டு போட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று 200 வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே முத்தமிட்டபடி அடக்கி வைத்திருக்கிறது வேட்பாளர் பார்த்து விட்டதால் திடீரென்று அனைத்து எழுத்துக்களும் உடனடியாக பாக்கு போடுவதை நிறுத்தி விட்டார்கள் இதனால் 5 6 ஆகிய இரண்டு வார்டுகளில் வாக்குப் போடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் வாக்குச் சீட்டின் பின்புறம் குத்தப்பட்ட முத்திரையானது இங்கே வெளியில் தெரிவதால் அப்படி தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார் ஆனால் அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது உடனடியாக அங்கிருந்த ஆட்களை வெளியே அனுப்பி தொடர்ந்து வாக்கு அளிப்பது நடைபெற்று கொண்டிருக்கிறது

Body:திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியத்தில் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் காலைமுதல் வாக்காளர்கள் விறுவிறுப்பாக ஓட்டு போட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று 200 வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே முத்தமிட்டபடி அடக்கி வைத்திருக்கிறது வேட்பாளர் பார்த்து விட்டதால் திடீரென்று அனைத்து எழுத்துக்களும் உடனடியாக பாக்கு போடுவதை நிறுத்தி விட்டார்கள் இதனால் 5 6 ஆகிய இரண்டு வார்டுகளில் வாக்குப் போடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் வாக்குச் சீட்டின் பின்புறம் குத்தப்பட்ட முத்திரையானது இங்கே வெளியில் தெரிவதால் அப்படி தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார் ஆனால் அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது உடனடியாக அங்கிருந்த ஆட்களை வெளியே அனுப்பி தொடர்ந்து வாக்கு அளிப்பது நடைபெற்று கொண்டிருக்கிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.