ETV Bharat / city

பொறியியல் மாணவர் சேர்க்கை பொறுப்புக் குழு மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை பொறுப்புக் குழுவின் தலைவராக தொழில் நுட்பக் கல்வி இயக்குநரை  நியமனம் செய்து உயர் கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

dhe
author img

By

Published : Apr 28, 2019, 10:21 PM IST

Updated : Apr 29, 2019, 9:08 AM IST

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையில் மாற்றம் செய்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் 2018 டிசம்பர் 28ஆம் தேதியன்று அரசாணை வெளியிட்டார்.

இதனை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசிற்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், 2019 ஏப்ரல் 24 ஆம் தேதி புதிதாக மீண்டும் ஒரு அரசாணையை உயர் கல்வித் துறை செயலர் மங்கத் ராம்சர்மா வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விதிகள் 2007இல் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இளங்கலை பொறியியல் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புக் குழு மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், உறுப்பினர் செயலராக கோயம்புத்துார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் புருஷோத்தமன் செயல்படுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு
 அதிரடியாக மாற்றி அமைப்பு 

சென்னை, 
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவராக தொழில் நுட்டக் கல்வி இயக்குனரை  நியமனம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பில்  மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வும், முதுகலைக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் அண்ணாப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் 28.12.2018 அன்று அரசாணை வெளியிட்டார். அதனை ஏற்க முடியாது எனவும், தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் அரசிற்கு கடிதம் எழுதினார். ஆனாலும் அரசு மற்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது.  உறுப்பினர்களுக்கு தனியாக கடிதமும் எழுதியது. ஆனால்  அவர்களும் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. 
எனவே இந்த நிலையில் 24.4.2019 அன்று புதியதாக மீண்டும் ஒரு அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம்சர்மா வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விதிகள் 2007 மற்றும் சட்டத்திருத்தின் அடிப்படையில்  பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இடங்களை  நிரப்புவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில்  பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை நடத்துவதற்கான குழுவினை மாற்றி அமைக்கப்படுகிறது. 
 அதனைத் தொடர்ந்து இளங்கலை பொறியியல் பி.இ, பி.டெக், பி.ஆர்க்., எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு மாற்றி அமைக்கப்படுகிறது.  
மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவராக  தொழில் நுட்ப கல்வி ஆணையர்,  உறுப்பினர்களாக  தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையர், மாநில தகவல் மற்றும் புள்ளியில் மையத்தின் அலுவலர், கல்லுாரிக்கல்வி இயக்குனர்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர்,  மருத்துவக் கல்வி இயக்கத்தின் மாணவர் தேர்வுக்குழுவின் செயலாளர், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை கழகத்தின் பதிவாளர்,  கோயம்புத்துார் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர், சேலம் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர், தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் உதவி திட்ட இயக்குனர், தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரும், கோயம்புத்துார் பொறியியல் கல்லுாரியின் பேராசிரியர் புருஷோத்தமன் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என அதில் கூறப்பட்டுள்ளது. 

Last Updated : Apr 29, 2019, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.