தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அவரது வீட்டிற்குச் சென்றார்.
அவருடன் சிஎம்டிஏ துணைத் தலைவர் கார்த்திகேயன் ஐஏஎஸ், கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவால், சந்திரமோகன் ஐஏஎஸ், டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ், வருண் குமார் ஐபிஎஸ், வருவாய் செயலர் அதுல்ய மிஸ்ரா, அப்போலோ குழுமத்தின் பிரீத்தா ரெட்டி ஆகியோர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்துக் கூறிய அரசு உயரலுவலர்கள் ஆவர்.