சென்னை: தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், இன்று (ஏப்.4) மாநிலத்தில் வருவாய் மற்றும் வரிவிதிப்பு தொடர்பாக அரசாணை குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. டட்டார் அவர்களின் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
* கி.வைத்தீஸ்வரன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
* ஜி.நடராஜன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
* சுரேஷ் ராமன், துணைத் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர், டிசிஎஸ் - சேவைப் பிரிவு.
* ஸ்ரீவத்ஸ் ராம், மேலாண்மை இயக்குநர், வீல்ஸ் இந்தியா லிட்.,
* கே.வேல்முருகன், தலைவர், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பு’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காமராஜர் சிலை அமைக்கக்கோரிய மனு - நெல்லை ஆட்சியர் பரிசீலிக்க மதுரைக்கிளை உத்தரவு