சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, மே 2ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின.
வாக்குப் பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அலுவலர்களுக்கான ஊதியம் என சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக 744 கோடி ரூபாய் செலவானதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்தலுக்கு 617 கோடியே 75 லட்சம் ரூபாயும் கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக 126 கோடியே 18 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் தேர்தல் செலவிற்காக 617 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பின்பு கூடுதலாக 126 கோடியே 18 லட்சம் ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூடுதலாக கோரிய நிதியிலிருந்து, 48 கோடி ரூபாய் நிதியை பணம் செலுத்தப்படாத பில்களுக்காக ஒதுக்கீடு செய்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆபத்துக்கு கால் செய்தால் அலட்சியம்' - பெண்கள் சேவை மையத்திற்கே சோதனை