சென்னை: விலையில்லா முகக்கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியாயவிலைக்கடை பணியாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ .0.50 வீதம் ஊக்கத் தொகை வழங்க அரசு திட்டமிட்டது.
அதன்படி, 55 லட்சத்து 77ஆயிரத்து 45 குடும்ப அட்டைகள் கணக்கிடப்பட்டு, மொத்தம் 27 லட்சத்து 88 ஆயிரத்து 534 ரூபாயைத் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.