ETV Bharat / city

கல்லூரிகளில் ஷிப்ட் முறை நேரில் ஆஜராக நேரிடும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! - தமிழ்நாடு செய்திகள்

highcourt
highcourt
author img

By

Published : Oct 12, 2020, 5:45 PM IST

Updated : Oct 12, 2020, 7:56 PM IST

17:34 October 12

சென்னை: அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்படவுள்ள ஷிப்ட் முறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக்கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தவறினால் உயர் கல்வித்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு கல்லூரிகளின் பாட வேளைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு ஷிப்ட், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒரு ஷிப்ட் என இரண்டு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பழைய முறைப்படி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வகுப்புகள் நடத்த அனுமதியளித்து, கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார்.

இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள 1,249 அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுய நிதி கல்லூரிகளிலும் இம்முறையை அமல்படுத்தக்கோரி, சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது 50 அரசு கல்லூரிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் ஒரே ஷிப்ட் முறை அமல்படுத்த உள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக இத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கக்கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கடைசி வாய்ப்பாக டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால் உயர் கல்வித்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

இதையும் படிங்க: சாதி பெயரைக் கேட்ட விவகாரம்: எஸ்.பி. அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு

Last Updated : Oct 12, 2020, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.