ETV Bharat / city

பொழுதுபோக்கு, மதக் கூட்டங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் அறிவிப்பு - பொழுதுபோக்கு, மத கூட்டங்களுக்கு அனுமதி

சென்னை: பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்கள் வரும் 19ஆம் தேதிமுதல் நடத்த அனுமதியளித்து முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TN govt announces more relaxations allowing religious political meetings

author img

By

Published : Dec 16, 2020, 9:52 AM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனா தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்துவருகிறது.

ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப ((Total Capacity) தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 விழுக்காடு அளவிற்கு மிகாமல் (50% of maximum capacity) பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசாரம், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்கள் வரும் 19ஆம் தேதிமுதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவியும், தகுந்த இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்தத் தொற்றுப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொதுமக்களின் நலன்கருதி, உங்கள் அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சேலத்தில் 5 நாள்கள் முகாமிடும் முதலமைச்சர்: முழு விவரம் உள்ளே...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.