சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அரசின் சார்பாக விதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வணிக வளாகங்கள், திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒமைக்ரான், டெல்டா வகை கரோனா பரவலின் மூன்றாம் அலை தீவிரமாகி உள்ளதால் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியுமாறு பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வாய், மூக்கு பகுதியை முழுவதுமாக மறையும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கும் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முன்னதாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் பேருக்கு கரோனா!