ETV Bharat / city

பாரதி மகளிர் கல்லூரியில் உட்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை - CM STALIN

வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பாரதி மகளிர் கல்லூரி
பாரதி மகளிர் கல்லூரி
author img

By

Published : Sep 5, 2022, 4:43 PM IST

சென்னை: 1964ஆம் ஆண்டு வடசென்னையில் பாரதி மகளிர் கல்லூரி கட்டப்பட்டு 58 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இந்த கல்லூரியில் உள்ள கட்டடங்கள் ஆய்வகங்கள் பழுதடைந்துள்ளன என கல்லூரியின் கல்வி இயக்குநர் அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், 'புதுமைப் பெண்' திட்டத்தை தொடக்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதி மகளிர் கல்லூரியில் உள்ள பழுதடைந்த கட்டடங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்,"பாரதி மகளிர் கல்லூரியில் மிகவும் பழுதடைந்த கட்டடங்கள் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், ஆசிரியர் அறைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 2022-23ஆம் கல்வியாண்டில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக 12 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது" எனத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.