தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்குச் செலவுத்தொகையாக தோராயமாக 621 கோடி ரூபாய் மாநில அரசிடம் தற்போது கேட்டுள்ளோம் என்றும்; கரோனா காலம் என்பதால் செலவுத் தொகையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா தொற்றுநோய் காரணமாக 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களை 95,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடியில் சமூக இடைவெளியுடன் ஓட்டுப்பதிவு நடக்க ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு செலவுத் தொகையாக 621 கோடி ரூபாய் மாநில அரசிடம் தோராயமாக தற்போது கேட்டுள்ளோம் எனவும்; கரோனா காலம் என்பதால் செலவுத் தொகையை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் கரோனா தொடர்பான பல்வேறு விஷயங்களை அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறோம் என்றும்; பிகாரில் நடைபெற்ற தேர்தல் முறையைப் போன்றும், மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.