சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, ’இன்றுவரை விக்கிரவாண்டி தொகுதிக்கு நான்கு பேரும், நாங்குநேரி தொகுதிக்கு இரண்டு பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்காக பொது பார்வையாளர் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புவியியல் தகவல் முறையில் (Geographical information system) வாக்குச்சாவடி பகுதியை மையமாக கொண்டு வாக்காளர்கள் இருப்பிட பகுதியை கூகுள் மேப்பில் தரவேற்றம் செய்யபடுகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமா அல்லது வாக்குப்பதிவு சீட்டு முறையா என்பதை மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். உள்ளாட்சித் தேர்தலுக்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் விவிபேட் இயந்திரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை. வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் தற்போதுவரை 12.11 லட்சம் வாக்காளர்கள் தங்களது நிலையை சரிபார்த்து உள்ளனர் ’ என்றார்.