தமிழ்நாட்டில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,587 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் 1341 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.