தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 13,967 நபர்களில் 7,588 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 66 அரசு, தனியார் ஆய்வகங்களில் 13,967 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 776 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 532 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்களில் 13,967 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் இன்று 400 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதுவரை 6,282 பேர் நலம் பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த ஏழு பேர் இன்று உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சைப் பெற்றவர்களில் 94 பேர் உயிரிழந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த 87 பேருக்கும், தமிழ்நாட்டில் 689 பேருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
- சென்னை -8,795
- செங்கல்பட்டு -655
- திருவள்ளூர் -636
- கடலூர் -421
- அரியலூர் -355
- விழுப்புரம் -322
- திருநெல்வேலி -253
- காஞ்சிபுரம் -236
- மதுரை -191
- திருவண்ணாமலை -171
- கோயம்புத்தூர் -146
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -132
- தூத்துக்குடி -135
- திருப்பூர் -112
- கள்ளக்குறிச்சி -120
- தேனி -96
- ராணிப்பேட்டை -88
- தென்காசி -83
- கரூர் -80
- தஞ்சாவூர் -80
- நாமக்கல் -76
- ஈரோடு -70
- விருதுநகர் -69
- திருச்சிராப்பள்ளி -68
- நாகப்பட்டினம் -51
- சேலம் -49
- கன்னியாகுமரி -49
- ராமநாதபுரம் -39
- வேலூர் -35
- திருவாரூர் -32
- திருப்பத்தூர் -30
- சிவகங்கை -29
- கிருஷ்ணகிரி -21
- புதுக்கோட்டை -15
- நீலகிரி -13
- தருமபுரி -5
மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா இருப்பதை சோதனைச் சாவடிகளில் கண்டுபிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.