ETV Bharat / city

திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை! - சென்னை

அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

STALIN
STALIN
author img

By

Published : Jun 25, 2022, 9:32 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையர் ரா. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆண்டு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருத்தணி ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் 250 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இவற்றிற்கான பெருந்திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை போன்றவை முக்கிய திருவிழாக்களாகும். இத்திருக்கோயிலில் சாதாரண நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய விழாக்காலங்களில் 4 லட்சம் முதல் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகை புரிகின்றனர்.

இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நெறிப்படுத்தப்பட்ட பிரகாரம், ஒழுங்கமைக்கப்பட்ட நிழல் மண்டபம், வெளிப்படையான நுழைவு வாயில்கள், கட்டமைப்பில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என மலைக்கோயில், அடிவாரம், பழனி மலை மற்றும் இடும்பன் மலை, இடும்பன் குளம் மற்றும் சண்முகா நதி உள்ளிட்ட பகுதிகளில் 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐந்தாம்படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சாதாரண நாட்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், ஆடிக் கிருத்திகையின் போது 5 லட்சம் பக்தர்களும் வருகை புரிகின்றனர். இந்த நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், திருக்கோயில் வளாகம், அன்னதான வளாகம், வாகனம் நிறுத்தும் வளாகம், மலைப்படிக்கட்டுக்கள் மேம்பாட்டு திட்டங்கள், இளைப்பாறும் மண்டபங்கள், மலையடி மேம்பாட்டுத் திட்டங்கள் (சரவணப்பொய்கை, வாகன நுழைவு வளாகம், வணிக மற்றும் பக்தர்கள் ஓய்வு வளாகம்), மலைப்பாதை (கூடுதல் பாதை மற்றும் புதிய மலைப்பாதை) உள்ளிட்ட பணிகளை 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளும் வகையில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெருந்திட்ட வரைவுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், இப்பணிகளைச் செம்மையாக மேற்கொள்ள உரிய ஆலோசனைகளை துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: சாலையில் செல்லும்போதே ஸ்கூட்டரில் பற்றிய தீ... ஒருவர் உயிரிழப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.