ETV Bharat / city

'பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்; சாதித்துக் காட்டுவோம்' - முதலமைச்சர் பேச்சு! - சென்னை தேர்தல் பரப்புரை

பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும், சாதித்துக் காட்டுவோம் என பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்

author img

By

Published : Jan 22, 2021, 5:52 AM IST

சென்னை: பல்லாவரம் பகுதியில் உள்ள அருள் முருகன் தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் சுய உதவி குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சுய உதவிக் குழுக்களுக்கு ஜெயலலிதா தான் உயிர் கொடுத்தார். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக ரூ.28,000 கோடி மட்டும் தான் கொடுத்தார்கள்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயக உயர்த்தி தமிழக அரசு வழங்கி வருகிறது. தாய்மார்கள் பிரசவத்தின் போது குழந்தை ஆரோக்கியத்தோடு செல்லக் கூடிய சூழ்நிலையை உருவாகியுள்ளோம்.

தாய் சேய் நல பணியில் 2030 ஆம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கை இப்போதே செய்துள்ளோம். இரண்டு லட்ச ரூபாயாக இருந்த காப்பீடு தொகை தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதுமட்டுமில்லாமல் ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் நிதி உதவி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள் 317 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்லூரி கட்டண தொகை செலுத்த முடியாதவர்களுக்கு, அரசே கல்வி கட்டணத்தை செலுத்தும். மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் விதத்தில் இதுவரை 55 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும், சாதித்து காட்டுவோம் என்று பேசினார். தொடர்ந்து, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

இதையும் படிங்க: சசிகலா தவிர்த்த அமமுகவை அதிமுக உடன் இணைக்க தூது விடும் துக்ளக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.