ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்:
- மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. அனைத்து கிராமத்திற்கும் இணையதள வசதி வழங்கப்படும்.
- நகரப்பகுதிகளுக்கு அதிவேக இணைய வசதிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. ’இல்லம்தோறும் இணையம் திட்டம்’ 1,815 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படும்.
- கடந்த 8 ஆண்டுகளில், 43,587 புதிய ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். 12 அரசு கல்லூரி மற்றும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளை திறந்து அரசு சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
- 12 போக்சோ நீதிமன்றங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு, 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
- 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை உள்ளது.
- 2,582 கோடி ரூபாயில், 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
- சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதும், மக்களைப் பாதுகப்பதும் அரசின் கடமை. அதனடிப்படையில், 2 லட்சத்து 50 ஆயிரம் கேமராக்கள் சென்னையில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளன.
- இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் பேச்சுவார்த்தைக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தமைக்காக காவல்துறை அதிகாரிகளை அனைவரும் பாராட்டினர்.
இதையும் படிங்க: ‘அதிமுகவுக்கு தில் இல்லை’ - வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!