ETV Bharat / city

பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணம் வாங்கப்பட்டதா? அதிகாரிகள் விசாரணை

மத்திய அரசின் நிதியில் இருந்து பள்ளிகளுக்கு வாங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் தரமில்லாமல் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணம் வாங்கப்பட்டதா?

author img

By

Published : Apr 13, 2021, 7:25 PM IST

சென்னை :அரசு பள்ளிகளில், இளைஞர் மன்றம் சுற்றுச்சூழல் மன்றம் போன்றவற்றை ஏற்ப்படுத்தி , மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து ,சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அது குறித்து போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதி, மார்ச் இறுதிக்குள் செலவழிக்க வேண்டும். இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மார்ச் மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ள 30,994 ஆயிரம் பள்ளிகளுக்கு 18 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரம் நிதியை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனரகம் ஒதுக்கீடு செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கியது.

அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு 5000 ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 10 ,000 ரூபாய், அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருட்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது .

அந்த நிதியில் இருந்து விளையாட்டுப் பொருட்கள் உள்ளூர் அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பொருள்கள் காலாவதியான தரமற்ற வகையில் உள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர் .

இதுதொடர்பாக புகார் ஒன்றையும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனரிடம் உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் அளித்துள்ளனர்.

மேலும் சானிடைசர், கையுறைகள், முக்கவசம் ஆகியவை வாங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டங்களில் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.