ETV Bharat / city

இலங்கையில் குண்டு வைத்ததாகக் கூறிய நபர் தலைமறைவு - இலங்கை

சென்னை: இலங்கையில் தான்தான் குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபர் தலைமறைவானார்.

சென்னை
author img

By

Published : Apr 26, 2019, 10:10 AM IST

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் தொடர் குண்டு வெடித்து 359 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக பேசிய அடையாளம் தெரியாத நபர், 'இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன். மேலும், கோயம்பேடு மேட்டுகுப்பம் பகுதியில் குண்டு வைத்துள்ளேன்; முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொலைபேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபர் மைக்கேல் பிரீடியை என்றும், அவருக்கு வயது 43 எனவும் தெரியவந்தது. அவரை விசாரிக்க கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு காவல் துறையினர் சென்றபோது, மைக்கேல் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை எனவும், அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும் மைக்கேல் மனைவி நவீனா கூறினார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள மைக்கேலே கோயம்பேடு காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்
என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபர் தலைமறைவு கோயம்பேடு போலீசார் விசாரணை. 

8838280494 என்ற எண்ணில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய ஒரு நபர் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான் தான் குண்டு வைத்தேன் என காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக பேசியதால் பரப்பரப்பு.

மேலும் கோயம்பேடு  மேட்டுகுப்பம் பகுதியில் குண்டு வைத்துள்ளேன் என்றும் முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

அதன்பேரில் விசாரணை செய்ததில் மேற்படி எண்ணுக்குரிய நபர் அழ்வார் திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடியை வயது 43 என்று தெரியவந்தது.

அவரை விசாரிக்க கோயம்பேட்டில் உள்ள வீட்டிற்கு சென்றால்  அவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை எனவும், அலுமினியம் பேப்ரிகேஷன் வேலை செய்து வருவதாகவும், குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் அவர் மனைவி நவீனா கூறியுள்ளார். 

தலைமறைவாக உள்ள மைக்கேல் பிரீடியை கோயம்பேடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.