ETV Bharat / city

மார்ச் 18இல் சட்டப்பேரவை கூட்டத்தொடரா? - நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு

2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Nadu Assembly session
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
author img

By

Published : Mar 1, 2022, 10:17 PM IST

சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பின்பு, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரவை மறு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக, நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிதிநிலை தாக்கல் செய்த மறுநாள், அதாவது 19ஆம் தேதி வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டமும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.