இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 78 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 3 ஆயிரத்து 429 நபர்களுக்கும், குஜராத் மாநிலத்திலிருந்து விமானம் மூலம் வந்ததில் ஒருவர், கேரளா, மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து வந்த 4, பிகார், கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த 3, ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த தலா ஒருவர் என 3 ஆயிரத்து 446 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 95 லட்சத்து 23 ஆயிரத்து 969 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 226 நபர்கள் வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 20 ஆயிரத்து 204 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் ஆயிரத்து 834 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 63 ஆயிரத்து 258 என உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 7 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், 7 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 14 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 764 என உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்! - எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க உத்தரவு!