ETV Bharat / city

Drunken Drive case: போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறு செய்த மூவர் - போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறு செய்த மூவர்

Drunken Drive case: போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறு செய்த மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, காவலர்கள் விசாரணை நடத்தினர்.

போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறு செய்த மூவர் கைது

author img

By

Published : Jan 2, 2022, 6:12 PM IST

Drunken Drive case: சென்னை, ஆயிரம் விளக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஸ்பென்சர் சிக்னல் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தியாகராய நகரில் ஸ்பென்சர் வழியாக, சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. போக்குவரத்து காவல் துறையினர் சொகுசு காரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில் தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர்(34) மற்றும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ், ரமேஷ்(34) ஆகிய மூன்று பேரும் அதிக மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மூவர் மீதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

பின்னர் காரில் இருந்த மூவரும் போக்குவரத்து காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் ரோந்துப் பணியிலிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து, மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அதன்பின் நடத்திய விசாரணைக்குப் பின் காரின் உரிமையாளரின் உரிமத்தை காண்பித்து, அபராதம் கட்டிய பின் மூன்று பேரையும் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: New Commissioner Office Divisions: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகங்கள்கீழ் இயங்கும் காவல் நிலையங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.