ETV Bharat / city

லாரி மோதி விபத்து - இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் மரணம்

மண்ணிவாக்கத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

accident
accident
author img

By

Published : Jan 30, 2022, 11:40 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் பூந்தமல்லி செல்லும் புறவழிச்சாலையில், மண்ணிவாக்கம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் லாரியின் பின்னால் மோதியதில் 30 வயது ஆண், 14 வயது ஆண், 7 வயது பெண் குழந்தை ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ஓட்டேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து ஓட்டேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவளம் கடற்கரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபத்து நடந்ததும், இறந்தவர்கள் கோபி(42), அவரது மகன் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் சபரி(10), 3ம் வகுப்பு படிக்கும் மகள் மோனிகா(8), என்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: விவசாயியை அவமானப்படுத்திய ஊழியர்கள் - மன்னிப்புக்கேட்ட மஹிந்திரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.