ETV Bharat / city

தூத்துக்குடி எஸ்பி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் - thoothukudi sp transferred to special invetsigation division

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எஸ்பி ஜெயக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க உள்ளதால் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

special invetsigation division
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Feb 25, 2022, 8:03 AM IST

சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு காவல் துறை எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் செயல்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எஸ்பி ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஜெயக்குமார் சேர்க்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி எஸ்பி ஆக இருந்த அவரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி விஜயகுமாரி ஆவடி காவல் ஆணையரகத்தின் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் துறை குற்றப்பிரிவு ஐ.ஜி காமினி தாம்பரம் காவல் ஆணையரகத்தின் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் துறையின் தலைமையிட துணை ஆணையர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆகவும் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி வழங்க அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.