காஞ்சிபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொண்டை மண்டல ஞானபிரகாச மடத்தின் 232 ஆவது மடாதிபதியாக, ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (87) ஆதீனமாக பொறுப்பேற்று 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் ஞானப்பிரகாச தேசிகர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஆதீனத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் குப்புசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “ மறைந்த ஆதினத்தின் உடல், இன்றிரவு காஞ்சிபுரம் தொண்டை மண்டலம் ஆதீனத்திற்கு கொண்டு வரப்பட்டு நாளை அங்கேயே அடக்கம் செய்யப்படும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவின் சீடர்களால் ஆதினத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இனி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தில் நித்தியானந்தா சீடர்களுக்கு அனுமதியில்லை. தற்போது உள்ள சீடர்களை வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா சீடர்களால் பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறை பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. அடுத்த ஆதினத்தையும் நிர்வாகக்குழு கூடி தேர்ந்தெடுக்கும் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’நான் பெரியாரின் கைத்தடி’ - கி.வீரமணி பெருமிதம்!