ETV Bharat / city

’நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்வில் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்’ - மருத்துவ கலந்தாய்வு

சென்னை: இந்திய அளவில் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் அவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகளவில் உயரும் எனவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் மூலம் அவர்களுக்கு 300 இடங்கள் கிடைக்கும் என்றும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

this-year-medical-cut-off-will-increase-says-educationalist

author img

By

Published : Oct 30, 2020, 4:08 PM IST

Updated : Oct 30, 2020, 7:21 PM IST

இந்தியாவில் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கலந்தாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டு வழங்குவற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், மருத்துவப்படிப்பு கலந்தாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது, ”மருத்துவப்படிப்பில் எதிர்பார்த்ததைவிட கட் ஆஃப் அதிகரித்துள்ளது. மாணவர்கள் நன்றாகப் படித்து அதிகளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளதால், மாணவர்களின் மதிப்பெண்களும் அதிகரித்துள்ளன.

ஆனால் கடந்தாண்டு 1,383 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். இந்தாண்டு 550 மதிப்பெண்களுக்கு மேல் 3,000 மாணவர்கள் இருக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு 520 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர். இதனால் கட் ஆஃப் மிகவும் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

500 முதல் 550 மதிப்பெண்கள் வரையில் இரண்டாயிரம் மாணவர்களும், 550 முதல் 600 மதிப்பெண்கள் வரையில் 1,500 மாணவர்களும், 600 மதிப்பெண்களுக்கு மேல் 1,000 மாணவர்களும் இருக்கின்றனர்.

இதனால் இந்தாண்டு கட் ஆஃப் அதிகளவில் உயர வாய்ப்பு இருக்கிறது. கட் ஆஃப் மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 605 முதல் 610 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 560-க்கு மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 520-க்கு மேலும், எஸ்.சி. பிரிவினருக்கு 450-க்கு மேலும் மதிப்பெண்கள் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

அதாவது 90 முதல் 100 மதிப்பெண்கள் வரையில் கட் ஆஃப் உயரும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு 100 மதிப்பெண் உயர்ந்துள்ளதைப்போல் இந்தாண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்வில் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்’

நிறைய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதியுள்ளதால், அதிகளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட நடப்பாண்டு கேள்வித்தாள் எளிதாக இருந்ததும், மீண்டும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கோவிட் காலத்தில் படிப்பதற்கு கால அவகாசம் கிடைத்ததும் மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நன்றாக மதிப்பெண் பெற காரணமாகியுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியது. இந்த ஒதுக்கீட்டால் 300 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்போது மாணவர்கள் ஆர்வமாகப் படிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இந்திய அளவில் 700 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ்நாட்டில் 7 மாணவர்கள் உள்பட 111 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

652 மதிப்பெண் முதல் 699 மதிப்பெண்கள் வரையில் தமிழ்நாட்டில் 198 மாணவர்கள் உள்பட 3,903 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்தாண்டு 1,022 மாணவர்கள் பெற்றனர். 600 முதல் 649 மதிப்பெண்கள் வரையில் தமிழ்நாட்டின் 824 மாணவர்கள் உள்பட 16,167 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். 552 முதல் 599 மதிப்பெண்கள் வரையில் 1,668 மாணவர்கள் உள்பட 29,106 மாணவர்கள் எடுத்துள்ளனர். 500 முதல் 549 மதிப்பெண் வரையில் 2,543 மாணவர்கள் உள்பட 37,806 பேர் பெற்றுள்ளனர்.

452 முதல் 499 வரையில் தமிழ்நாட்டின் 3,077 மாணவர்கள் உள்பட 45,290 பேர் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 5,000 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 8,360 மாணவர்களும் பெற்றுள்ளனர். எனவே இந்தாண்டு கட் ஆஃப் மிகவும் உயரும் நிலையுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

Last Updated : Oct 30, 2020, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.