அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக திருநங்கைகள் திமுகவில் உறுப்பினர்களாக இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது திருநங்கைகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் பலர் நேரில் சந்தித்து தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவில் இணைவதற்கு எங்களுக்கும் வாய்ப்பளித்த கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி என்று கூறினர்.
மேலும், இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் திருநங்கைகளின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்குதான் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!