திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே. பேட்டை அருகே பட்டியலின மக்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டு மனையில் வீடு கட்ட அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் வேறு ஒரு தரப்பினர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதே போல் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட கோடமலை, அடார் எஸ்டேட், சோலடா மட்டம் பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அனைத்து மக்களுக்கும் பூத் சீட்டு வழங்கினர். அதனைத் தொடர்ந்து வெளியூரில் வசிக்ககூடிய மக்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க அந்தந்த வாக்குசாவடிக்கு வந்தனர். அப்போது அங்கு புதிய பெயர் பட்டியல் எனக்கூறி வெளியூரில் வசிக்ககூடிய மக்கள், இறந்தவர்களின் பெயர்கள் உள்பட பலரது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 84 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தது. வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தங்களது வெளியூரில் இருந்து வந்த மக்கள் வாக்களிக்க முடியாமல் உரிமைகள் பரிபோயிருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் குன்னூர் தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அலுவலர்கள் தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையும் படியுங்க: காணாமல்போனவரை மீட்டுத்தரக் கோரி தேர்தலைப் புறக்கணித்த உறவினர்கள்!