தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலையை அவமதித்தவரை கைது செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆனந்தன், "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும். சிலை அவமதிக்கப்பட்ட பின்பு காலதாமதமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காரணம் காவல்துறை அனுமதி மறுத்ததுதான்.
எங்கள் இனத்தை வைத்து அரசியல் செய்வார்கள், ஆனால் எங்கள் மக்களை அரசு கண்டுகொள்வதில்லை. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதையும் படியுங்க: ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள் - மறைக்கப்பட்ட உண்மையைக் கூறும் 'மெரினா புரட்சி'