சென்னை:சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகரப்போக்குவரத்து பயிற்சி மையத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இதில் போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்ட அலுவலர்களும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம்,சி.ஐ.டி.யு உள்ளிட்ட 66 தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே ஐந்து கட்டப்பேச்சு வார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் இன்று (ஆகஸ்ட் 3)ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முன்வைக்க உள்ளனர்.
இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!