தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகத் தொடரவும், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜ், மீண்டும் மாதவரம் காவல்துறை துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 13 ஆவது பட்டாலியன் கமாண்டட் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியை தொடரவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13ஆவது பட்டாலியன் கமாண்டட் ஆக செந்தில் குமாரும், சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையராகப் பாலகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க; அண்ணா பல்கலை.யில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு!