சென்னை: மாறன், திருசிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையக்கும் நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரித்துள்ளார்.
புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் புரொடியூசர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளப்பக்கத்தில் “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி” என பதிவிட்டு செப்டம்பர் மாதம் வெளியீடு என அறிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாலத்தீவின் ரகசியம் அறிந்த சன்னி லியோனின் புகைப்பட தொகுப்பு