ETV Bharat / city

‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ - ஜெயக்குமார் விமர்சனம் - The successor politics in the DMK will remain

சென்னை: அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

minister_jayakumar
minister_jayakumar
author img

By

Published : Jan 23, 2020, 2:22 PM IST

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது குடும்பம் இருந்ததாகவும் புகழாரம் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவை விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்றார். மேலும், அதிமுகவை விமர்சிக்கும் துரைமுருகன் முடிந்தால் திமுக தலைவராகி காட்டட்டும் என்றும் சவால்விட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு எனவும், மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியதால் அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: 'ரஜினி தாக்கி பேசியது திமுகவைத் தான்... நாங்க அந்த சீனிலேயே கிடையாது'

Intro:Body:https://wetransfer.com/downloads/7226d166b6b29c6ae5705f460513785d20200123061551/81c3b69bd78a39d16a951489e73bf4d220200123061625/f5006a

அதிமுக வில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரமுடியும் ஆனால் திமுக வில் வாரிசு அரசியல்தான் எப்போதும் நிலைத்திருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கும் அவரது திருவுருவ படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், அந்த காலத்திலேயே பெண்களுக்கென்று தனிப்படை அமைத்தவர் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் இருந்த குடும்பம் அவருடையது எனவும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், துரைமுருகன் விமர்சனம் அர்த்தமற்றது எனவும், அதிமுக வில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரமுடியும் ஆனால் திமுக வில் எப்போதும் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக வை விமர்சிக்கும் துரைமுருகன் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே என சவால் விட்ட அவர் ஸ்டாலின் அதற்கு அனுமதிப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் என்பது வெறும் ஒரு இடைவேளைதான் எனக் கூறிய அவர், அதிமுக தான் எப்போதும் ஹிரோ எனவும் 2021 ஆம் ஆண்டு கிளைமாக்ஸில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்ச்சி விகிதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் வேண்டாம் என்பதே அதிமுக வின் நிலைபாடு எனவும், மத்திய அரசு நீட்டை கட்டாயம் ஆக்கிய பட்சத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்ச்சி விகிதம் நிச்சயம் அதிகரிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார். மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான திமுக போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்ததே திமுக தான் எனவும், அவர்களே வந்துதிருடிவிட்டு திருடன் திருடன் என கூக்குரலிடுகின்றனர் எனவும் அவர் விமர்சித்தார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.