அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், 'ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார்
ஆளுநர் அதிகாரம் குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது' என்றார்.
மேலும் அவர் விடுதலையாகாத 6 பேர் குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், 'தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி' என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்னைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும் என்றும்; பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே திமுகவின் வேலை இல்லை - சிவகங்கையில் சீறிய சசிகலா