இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது நடைபெற்ற தேர்தல் பரப்புரை நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் தங்களை வரவேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பரப்புரை விரைவில் தொடங்க இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க நட்பு ரீதியாக நேரம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.
ரஜினிகாந்த் போலவே கமல்ஹாசனும் அரசியலில் இருந்து விலகுவார் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறிய கருத்துக்கு பதிலளித்த கமல்ஹாசன், அது அவருடைய பிரார்த்தனை அதன்படி தான் நடக்க இயலாது என்றார்.