ETV Bharat / city

கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும் - எ.வ. வேலு - தமிழ்நாடு

கன்னியாகுமரி முதல் களியக்காவிளைவரை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும்

author img

By

Published : Aug 19, 2021, 4:24 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.

நான்காவது நாள்

தொடர்ந்து நான்காவது நாளான இன்றும் (ஆக. 19) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பொது விவாதத்தின் மீது பதிலுரை அளித்தனர்.

பேரவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, தேசிய பாதுகாப்பு நெடுஞ்சாலை குறித்தும் விவாதம் நடைபெற்றது.

பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் பேசியபோது, "கன்னியாகுமரி முதல் களியக்காவிளைவரை தேசிய பாதுகாப்பு நெடுஞ்சாலை சரியான முறையில் இல்லை.

தற்போது, அதனை சீர்செய்ய பணியினை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், "கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 4.16 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

பசுமை வழி சாலை ஒப்பந்தம்

தற்போது, 31.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய்கள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 42.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை மூலம் பசுமை வழி சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலை

ஒப்பந்தம் கிடைத்தவுடன் உடனடியாக அதற்கான பணிகளும் நடைபெறும். மேலும், அதனை நான்கு வழிச்சாலையாக அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும், குடிநீர் வடிகால் வாரிய பணிகளும் நிறைவடைந்தவுடன் சாலை செப்பனிடப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வரி குறைப்பினால் நாளொன்று 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.