சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. .
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அனைத்துக்கட்சி குழு சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினர் நாளை (ஜூலை 16) சந்திக்கின்றனர்.
இதையும் படிங்க: 'சிறு,குறு வணிகர்கள் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தில் விலக்கு'