ETV Bharat / city

மாநிலங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி வருகிற 8ம் தேதி தொடக்கம்

தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டி வருகின்ற  8ஆம் தேதி முதல் ஆவடியில் நடைபெற உள்ளதாக சென்னை ரைபில் கிளப் செயலாளர் ராஜசேகர பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

துப்பாக்கி சுடும் போட்டி வருகிற  8ம் தேதி தொடக்கம்

author img

By

Published : Mar 4, 2021, 5:19 AM IST

சென்னை ஆவடியை அடுத்த வீராபுரத்தில் தமிழ்நாடு அளவிலான 46ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று (மார்ச் 3) தொடங்கியது. அப்போட்டியை சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநில அளவிலான இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏறத்தாழ 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி ஏற்பாட்டாளரும், சென்னை செயலாளருமான ராஜசேகர பாண்டியன் கூறுகையில்,“வரும் 8ஆம் தேதி தென்னிந்திய அளவிலான போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து துப்பாக்கி சுடுதல் வீரர்கள் பங்கேற்கும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும், இந்த போட்டியில் வெற்றிப் பெறும் வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற வாய்ப்புள்ளது.
துப்பாக்கி சுடும் போட்டி என்பது குறைந்த செலவில் நடைபெறக் கூடிய ஒரு போட்டியாகும். துப்பாக்கிகள், தோட்டாக்கள் ரைபிள் கிளப் நிர்வாகம் வழங்குவதால் இது எளிதான விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டில் 10 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்க முடியும்.

வேறெந்த ஒரு விளையாட்டிலும் இது போன்ற அதி விரைவான வளர்ச்சியை அடைய முடியாது. குறிப்பாக, இந்த போட்டிகளில் ஈடுபடுவதால் விரைவாக உலக அளவிலான போட்டியில் பங்குபெற்று தங்களது திறமைகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆயுதங்களை கையாளும் போட்டி என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை கவனமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்படுகிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.