சென்னை வில்லிவாக்கம் அண்ணா தெருவைச் சேர்ந்த தயாளன் என்பவரது மகன் தனுஷ்(18). இவர், திருவொற்றியூரில் நடைபெற்ற பாஜக வேல் யாத்திரையில் கலந்து கொண்ட பின், நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளிக்கச் சென்றார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். அதன் பிறகு, நண்பர்கள் கடலில் தேடியும் கிடைக்காததால் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே கரை ஒதுங்கிய தனுஷின் சடலத்தை கைப்பற்றிய திருவொற்றியூர் காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.