ETV Bharat / city

"பன்னாட்டு தடுப்பூசி மையம்" கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் - Member of Parliament D.K. Rangarajan

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள "பன்னாட்டு தடுப்பூசி மைய" கட்டடத்தை இன்று (ஜூலை 1) திறந்து வைத்தார்.

"பன்னாட்டு தடுப்பூசி மையம்"  கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

author img

By

Published : Jul 1, 2021, 2:41 PM IST

சென்னை: "பன்னாட்டு தடுப்பூசி மைய" கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஜூலை 1) திறந்து வைத்தார்.

மையத்தில் புருண்டி, கென்யா, ருவாண்டா, உகாண்டா உள்ளிட்ட 21 நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த தடுப்பூசி மையத்திற்கு வந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

மேலும், ஆன்லைன் மூலமாகவும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து நேரடியாக மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த பன்னாட்டு தடுப்பூசி மையம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையத்திற்கு ரூ. 50 லட்சம் நிதி

தொடர்ந்து பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், "1908-10 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த தடுப்பூசி மையம், குன்னூரில் உள்ள தடுப்பூசி மையம், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஆகிய மூன்றும் மத்திய அரசால் நிறுவப்பட்டது.

இந்த மையங்கள் பழமையானது என்று சுகாதாரத் துறையால் சொல்லப்பட்ட காரணத்தால் மூடுவது என்று முடிவெடுக்கப்பட்ட சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசி இதற்காக, தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த தடுப்பூசி மையத்திற்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

மேலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சமுதாயக்கூடத்திற்கு மட்டுமே எங்கள் தொகுதி நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 75 விழுக்காடு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மட்டுமே நிதி கொடுத்துள்ளது.

அதனடிப்படையில் இது ஒரு சிறந்த அமைப்பாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இங்கு வந்து, இந்த மையத்தை திறந்து வைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பெருமையுடன் கூறினார்.

இதையும் படிங்க: பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி சாத்தியமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.