ETV Bharat / city

ஓணம் பண்டிகை - முதலமைச்சர் வாழ்த்து - சென்னை

அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை: வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

author img

By

Published : Aug 20, 2021, 5:31 PM IST

ஓணம் பண்டிகை நாளை (ஆக. 21) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், "கேரள மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓணம் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓணம் பண்டிகை சிறப்பு

சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது.

கேரள மாநிலத்தில் 'அறுவடைத் திருநாள்' எனப்படும் ஓணம் பண்டிகை, ஆவணி மாதம் முதல்நாளன்று 'அத்தப்பூ' கோலம் போட்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வீரமும், ஈரமும் மிகுந்த 'மாவலி' சக்ரவர்த்தியை கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வணங்கி வரவேற்கும் நாளாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாள்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவு பரிமாற்றங்கள் ஆகியவற்றை தாராளமாக பகிர்ந்துகொள்வர்.

இப்பண்டிகையில் கேரள மக்கள் தங்களுக்குள் உள்ள அன்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் அற்புதமான பண்டிகைத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஓணம் திருநாளில் இளைஞர்கள் எழுச்சியுடன் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியமிகு படகுப்போட்டியை 10 நாள்கள் விமரிசையாக நடத்துவர்.

இறுதிநாளில் 'திருவோணம்' என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் 'ஓணம்' திருவிழா இனிதாக எல்லோரும் மகிழத்தக்க வகையில் நிறைவடைகிறது.

'அத்தப்பூ' கோலம் போட்டு கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

திராவிட மொழிகளில் ஒன்றான..

தமிழ்நாட்டில் வாழும் கேரள மக்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.

எனவேதான் ஓணம் பண்டிகையை அவர்கள் மனநிறைவுடன் கொண்டாடுவதற்கு வசதியாக எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து 2006ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று, சென்னை மாநகரத்திற்கும் 'உள்ளூர் விடுமுறை' என்று 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அறிவித்து, தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதிக்கும் முதலமைச்சராகத் திகழ்ந்தார்.

அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்கள் அனைவரும் நலமிகு வாழ்வும், அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும்.

மீண்டும் 'ஓணம் திருநாள்' வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: '14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.