சென்னையை அடுத்த ஆவடி அருகே முத்தாபேட்டையில் உள்ள 400 அடிச் சாலையில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது சாலை ஓரம் காரை நிறுத்தி விட்டு சிலர் நடைபாதையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட காவல்துறையினர் அவர்களை விசாரித்தபோது, அவர்கள் தங்களை வழக்கறிஞர்கள் எனக் கூறி, பின்னர் உடனடியாக அங்கிருந்த செல்வதாக கூறினர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸாரை தகாத வார்த்தைகளால் மதுகுடித்தவர்கள் திட்டும் காட்சிகளோடு பதிவான விடியோ சமூக வலையதளங்களில் வைரலானது.
இதையடுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் உண்மையிலேயே வழக்கறிஞர்கள் தானா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.