ETV Bharat / city

'தரம் தாழும் தமிழ்நாடு அரசியல்' - தங்கர் பச்சான் வேதனை - Thangar Bachchan condemns Rasa's speech

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது, முதலமைச்சரின் தாயார் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தரம் தாழும் தமிழ்நாடு அரசியல்' -  தங்கர் பச்சான்

author img

By

Published : Mar 28, 2021, 8:28 AM IST

Updated : Mar 28, 2021, 11:32 AM IST

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "எப்படியாவது வாக்குகளைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் தாய் மீது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வீசியுள்ள பழிச்சொல்லை திமுகவில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சொல்வதற்கே வாய் கூசும் அவரது தொடர்ச்சியான தரம் தாழ்ந்த பேச்சுக்கள் போல் மற்றவர்களும் பேசத் தொடங்கிவிட்டால் அதையும் இந்த மக்கள் கேட்டுக்கொண்டுதான் வாழ வேண்டுமா?

தலைமையில் உள்ளவர்கள் அவரது பேச்சினைக் கண்டிக்காததும், ஊடகங்கள் இது குறித்துப்பேச மறுப்பதும் தமிழ்நாடு அரசியல் முழு கொள்ளை வணிகமாக மாறிப்போனதையே பறைசாற்றுகின்றன. இப்படியே போனால் பகுத்தறிவுப் பாசறையில் பாடம் பயின்றதாக கூறிக்கொண்டு பெருந்தலைவர்களின் படங்களை இனி பயன்படுத்துவதில் எவ்வித நியாயமும் இருக்காது" என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, "ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி இருவரின் அரசியல் ஆளுமையை ஒப்பிட்டுப் பேசும்போது நான் பேசிய சில வார்த்தைகளை ஒட்டி வெட்டி சமூக வலைதளங்களில் பரப்புவதாக அறிகிறேன். அதற்கு நான் பொறுப்பல்ல. முதலமைச்சரை இழிவாகப் பேசுவது என் நோக்கமல்ல" என்று விளக்கமளித்தார்.

Last Updated : Mar 28, 2021, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.